தம்பிலுவில் பகுதியில் வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட ஒருவரை சனிக்கிழமை பகல் கைதுசெய்ததுடன் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.வி. சமிந்த தெரிவித்தார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தின் முன்னாள் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினம் காலை 7.30 மணிக்கு வீட்டின் பின்புறத்தில் வீட்டின் உரிமையாளர்கள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வீட்டினுள் புகுந்து 4 பவுண் நிறை கொண்ட தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பாக தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை சனிக்கிழமை பகல் 2 மணிக்கு கைது செய்த பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!