திருக்கோவிலில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்
திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் திருக்கோவில் பொலீஸ் பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் வீதியில் முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச். எம். ஹம்ஸா ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார். மொத்தமாக 30,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
மேலும் இவ்வாறான நோய் தொற்றுக்கு உடந்தையாக சம்பவத்தில் கைது செய்யப்படடால் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்படும் என கடுமையான தொனியில் எச்சரிக்கப்பட்டு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார் .
திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி AB .மசூத் தெரிவிக்கையில் திருக்கோவில் சுகாதார பிரிவில் சமுக இடைவெளி பேனாமை, முக்க்கவசம் அணியாமை, பலர் ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன. கொரோனாவை இப் பிரதேசத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .
திருக்கோவில் பிரதேசத்தில் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!