(டி.க்.ஷி.த்)
திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள வேளைகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடமாடும் வர்த்தக நிலையங்களுக்கான அனுமதியை புதுப்பித்தல் தொடர்பான விஷேட கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று (04.04.2020) பிரதேச செயலாளர் திரு.த. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த பிரதேசத்தில் நடமாடும் வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. திருக்கோவில் பிரதேசத்தில் 45 மீன் வியாபாரிகளுக்கான Pass வழங்கப்பட்டது. அதில் 15 மீன் வியாபாரிகளுக்கு வெளியூர்களுக்கு சென்று விற்பனை செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. வெளியூர் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நபர்கள் உள்ளூரில் குறித்த அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே வெளியூர்களில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இவ் விஷேட கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் திரு. R.W. கமலராஜன், திருக்கோவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி S.S. ஜயவீர, சிரேஷ்ட கிராம சேவைகள் உத்தியோகத்தர் கன. ராஜரெத்தினம் , மீன்பிடி மேலாளர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், வர்த்தக சங்க தலைவர்கள், மீன்பிடி சங்க தலைவர்கள், வெதுப்பக உரிமையாளர்கள் என பலரும் கொண்டனர். இவ் விஷேட கூட்டத்தில் சுமார் 60 பேர் பிரசன்னமாகி இருந்தனர்.










