Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை மஹோற்சவத்தின் கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழா

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை மஹோற்சவத்தின் ஓரங்கமாக கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழா நேற்று 2019.07.30 செவ்வாய்கிழமை இரவ…

Image


வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை மஹோற்சவத்தின் ஓரங்கமாக கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழா நேற்று 2019.07.30 செவ்வாய்கிழமை இரவு 11.00மணியளவில் ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.


மேலும் ஆலய மஹோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் அவர்களின்  ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தன் மற்றும் அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் ஜெகதீசன் , விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், ஆலய நிவாகத்தினர், ஆசிரியர்கள்,  மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருக்கோவில்வலயத்தைச்சேர்ந்த தரம்5 புலமையாளர்கள்,  க.பொத. சா.த 9ஏ புலமையாளர்கள்,  க.பொ.த. உயர்தர சாதனையாளர்கள் என மூவகையைச்சேர்ந்த உயர்பெறுபேற்றைப்பெற்ற 18மாணவர்கள்  பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.

தரம்5புலமையாளர்கள்.(04பேர்)
கௌரீஸ்வரன் நர்த்தனன், சிவச்சந்திரன் பவிங்கன், கோபாலகிருஸ்ணன் கர்மிசன், ஆனந்தராசா சனுக்சன்.

க.பொ.த . சா.த 9ஏ சாதனையாளர்கள்;(04பேர்) சிவநேசன் யதுர்சனா, கிருபைராஜா நிசாநிதன், ரவீந்திரன் ஹேசாந்த், நாகேந்திரன் சஹிர்தன்.

க.பொ.த .உயர்தர சாதனையாளர்கள்: (10பேர்)
கோபாலரெத்தினம் தீபன் – மருத்துவம், மகராசா தனுசன்- மருத்துவம்,  சந்திரகுமார் சதுர்சன் – மருத்துவம், செம்பொற்சோதி சாய்ன்தன்- பொறியியல்,  சிறிகரன் ஹரிஸ்- பொறி.தொழினுட்பம், அருந்தவராஜா சதிராஜ்-விஞ்.தொழினுட்பவியல்,  நடராசா தனோஜினி-உயிரியல் விஞ்ஞானம்,  சர்வானந்தம் நிலக்சன் – பௌதீகவிஞ்ஞானம்,  பேரின்பம் டிலுக்சன்-வர்த்தகம்,  யோகலிங்கம் நிசாதனா-கலை.

இதன் போது திருக்கோவில்  ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியின் "ஆடிவேலன் அருளிசை", "திருக்கோவில் முருகன் திருவூன்சல்  பாடல்"   இறுவெட்டும் வெளியிடப்பதடத்துடன், இவ் இறுவெட்டின் பாடல்களை பாடிய பாடகர்கள் பாடியவர்கள் - திரு. தங்கராசா தனுராஜ் ,செல்வன்.  ஆசீர்வாதம் ஆருஜன்
செல்வி. வசந்தன் சிதுசயோமி, இயற்றியவர்கள் இரா.தெய்வராஜன்
 எஸ்.பி.கனகசபாபதி கோவிலூர் செல்வராஜன், இசை - ஜீ . சதீஸ் மற்றும் ஒலிப்பதிவு கே. பிரணவன்  ஆகியோர் கௌரவிக்கப்படனர்.




































You may like these posts