
[NR]
கிழக்கிலங்கை திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வாருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருவிழாவும் தீர்த்தோற்சவமும் - 2019.
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வாருடாந்த ஆடி அமாவாசை உற்சவமானது 2019.07.14 திகதி இன்றையதினம் வெகுசிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இக்கிரியைகள் யாவும் மஹோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் அவர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது. இதன்போது ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
ஆலய உற்சவமானது தொடர்ச்சியாக 17 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று 2019.07.31 திகதி தீர்த்தோற்சவம், கொடியிறக்க திருவிழாவும், 2019.08.01 திகதி பூங்காவன திருவிழாவும், 2019.08.02 திகதி வைரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது.






































