Contact Form

Name

Email *

Message *

அக்கரைப்பற்று - கொழும்பு சொகுசு பஸ்ஸில் சந்தேகத்திற்கு இடமான தூள் இராணுவத்தினரால் மீட்பு

அக்கரைப்பற்று கொழும்பு சொகுசு பஸ்ஸில் சந்தேகத்திற்கு இடமான தூள் இராணுவத்தினரால் மீட்பு. - ஒரு மணித்தியாலயத்திற்கு மேலான விசாரணையை அடுத்து பஸ் விடுவிப்பு அக்கரைப்பற்றில்…

அக்கரைப்பற்று கொழும்பு சொகுசு பஸ்ஸில் சந்தேகத்திற்கு இடமான தூள் இராணுவத்தினரால் மீட்பு. - ஒரு மணித்தியாலயத்திற்கு மேலான விசாரணையை அடுத்து பஸ் விடுவிப்பு

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி திருக்கோவில் ஊடாக பயணித்த சொகுசு பஸ்ஸில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவகைப் தூள் சோதனையின் போது இராணுவத்தினரால் திங்கட்கிழமை இரவு 06.05.2019 மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று இருந்து திருக்கோவில் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் திருக்கோவில் அந்தோணியார் தேவாலயத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டு இராணுவத்தினரால் சோதனையிட்ட போது சந்தேகிக்கப்படும் ஒருவகை தூளினை மீட்டு திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் இருந்து அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு பஸ் முழுமையாக இராணுவத்தினரால் சோதனைகள் இடம்பெற்றிருந்ததுடன் சீசீடி கமரா உட்பட சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பஸ்ஸின் சாரதி நடத்துனர் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த அனைவரிடமும் வினவியபோதும் சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில் இராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டதுடன் சுமார் இரவு 10 மணியளவில் பஸ் சம்பவ இடத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் இராணுவத்தினரால் எச்சரிக்கப்பட்டு பஸ் விடுவிக்கப்பட்டனர்.

You may like these posts