Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத்தில் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத்தில் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு 04.05.2019 திகதி சனிக்கிழமை இன்று விநாயகபுரம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் மண்டப…

Image

திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத்தில் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு 04.05.2019 திகதி சனிக்கிழமை இன்று விநாயகபுரம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் மண்டபத்தில் வர்த்தகசங்கத்தின் தலைவர் ஜீ.விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத்தின் செயலாளர் கே.சகிந்தன்,  பொருளாளர் கே.சத்தியசீலன்,  உபசெயலாளர் ஜீ.காந்தரூபன் மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள், உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் போது எவ்வாறு நுகர்வோருக்கு இடையூறுகள் இன்றி சிறப்பான முறையிலும், பாதுகாப்பான முறையிலும்  வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் அதிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான வர்த்தக சங்க அடையாள அட்டையும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.



















You may like these posts