மரண அறிவித்தல் -
அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்
மலர்வு -1930.03.23 உதிர்வு- 2018.12.23
தம்பிலுவில் 2ம் பிரிவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம் அவர்கள் 2018.12.23 ஞாயிறு இன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற கதிர்காமத்தம்பி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற நாகமுத்து பாலசுந்தரம்(வட்டை விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற மகேஸ்வரன்(ஆசிரியர்), கமலாதேவி(ஓய்வுநிலை பிரதி அதிபர்) பரமேஸ்வரி(கனடா), பரமேஸ்வரன்(அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, மட்டக்களப்பு), சந்திரேஸ்வரன்(பிரதி அதிபர், விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு), இராஜேஸ்வரன்(ஆசிரியர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராணி காலஞ்சென்ற தங்கவடிவேல்(ஆசிரியர்), மோகனசுந்தரம்(கனடா) சுலோஜினி, ஜெயகலா(பிரதேச சபை, காரைதீவு), தனலட்சுமி(ஆசிரியர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், தவநீதன்(காமெண்ட்ஸ், யாழ்ப்பாணம்), கமலினி(தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை திருக்கோவில்), ஞானகிர்ஷன்(கனடா), வருண்(கனடா) ஆகியோரின் அம்மம்மாவும், மருதினி, பாமினி, சாருஜன்(பொருளாளர்), சாநுஜா(சித்த வைத்திய பீடம், யாழ்ப்பாணம்), அபிசதன், அபிசனா, கர்ஷிகா, கர்ஷயன், ஆகியோரின் அப்பம்மாவும், நிரோஜினி(பிரதேச செயலகம், பொத்துவில் தமிழினியன் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கல்முனை) அபிலக்சி, அங்கேஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.