
இவ்விழாவின் கலாசார, சமய, சமூக விழுமிய மனித உரிமை செயற்பாடுகளுக்காக நாடளாவிய ரீதியில் 33பேர் தெரிவுசெய்யப்பட்டு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் எமது பிரதேசம் சார்பாக தம்பிலுவில் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், தற்போதைய பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு சோ.இரவீந்திரன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இவ்விருதினை பாராளுமன்ற உறுப்பினர் கே.துறைரெத்தினசிங்கம் , மேல் மாகாணசபை உறுப்பினர் மொகமட் பாயிஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
மேலும் இதேநாளில் இலங்கை சாரணியச் சங்கத்தினால் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வில் இலங்கை சாரணியச் சங்கத்தின் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, கல்முனை வலயத்தின் (தமிழ்பிரிவின்) ஆணையாளராகவும் திரு சோ.இரவீந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.