
[Photos - Arju & MN_Sathu & Aathu]
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரதமானது கடந்த 08.11.2018 திகதி வியாழக்கிமை ஆரம்பமாகி இறுதி நாளான 13.11.2018 செவ்வாய்க்கிழமை இன்று சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவுற்றது. இதன்போது இன்று காலை வேளையில் சூரபத்மனின் வீதி உலா நிகழ்வு இடம் பெற்று இதனை தொடர்ந்து ஆலயத்தின் வெளி வீதியிலே மாலை 3 மணியளவில் சூரசம்ஹார நிகழ்வானது ஆரம்பமாகிய வெகுசிறப்பான முறையில் நடைபெற்றது
மேலும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்தில்இரண்டு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து இம்முறை வெகுசிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ் கந்த சஷ்டி விரத கிரியைகள்யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களவர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது.
இதன் போது சுவாமி கந்தப் பெருமான் போரின் போது சூரபத்மனின் ஒவ்வொரு தலைகளை கொய்கின்ற காட்சிகளினை கந்தபுராணத்தில் உள்ளவாறு சூரன்போர் நிகழ்வானது இடம் பெற்றது. இதில் ஏராளமான பக்த்த அடியார்கள் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!