இந்நிகழ்வில் கனகரெட்ணம் அறிவகத்தின் வழிகாட்டி குருஜி கலியுகவரதன் ஐயா மற்றும் கனகரெட்ணம் அறிவகத்தின் நிதி உதவியாளரும் திரு.க.ரகுலோஜன் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ஆறுமுக கிருபாகரசர்மா , திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.எஸ். நடேசன், திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரி.மலர்பிரியன் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.ஏ.அருளம்பலம் மற்றும் கனகரெட்ணம் அறிவகத்தின் பாட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்கள் இங்கு மாணவர்களுக்காக கற்பிக்கப்படுகின்றது. 2018 மார்கழியில் க போ த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 30 மாணவர்களுக்கு இக்கற்கை நெறி புகட்டப்பட்டது. இதன்போது இக் கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மதிப்பீட்டு பரிட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு தொடர்ச்சியாக ரூபாய்க்கு வகுப்பிற்கு வருகை தந்து மாணவர்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் 2020ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களும் இதன்போதும் சேர்க்கப்பட்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!