Contact Form

Name

Email *

Message *

மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்

(எஸ்.கார்தித்கேசு) அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அண்மையில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கிய இளைஞன…

Image


(எஸ்.கார்தித்கேசு)

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அண்மையில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கிய இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தள்ளார்.


இவ்விபத்தானது கடந்த வெள்ளிக்கிழமைமாலை தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அண்மையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கியதுடன் இதில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மேற்படி மரணமடைந்த இளைஞனின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுருந்ததைத் தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்கான கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்தில் சிக்கி மரணடைந்த இளைஞன் திருக்கோவில் 01 நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஈஸ்வரன் அஜந்தன் என்றும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments