
உலக அமைதி வேண்டி 126 நாடுகளில் உள்ள சாயி நிலையங்களில் ஒரே நேரத்தில் 24 மணி நேரம் தொடர்ச்சியான பஜனை அகண்ட நாம பஜனை நிகவானது 10.11.2018 சனி பிற்பகல் 6.00 மணி தொடக்கம் 11.11.2018 ஞாயிறு பிற்பகல் 6.00 மணி வரை தொடர்ச்சியான பஜனை நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றது.
இதேபோன்று தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சாயி நிலையங்கள் இணைந்து நடாத்திய அகண்ட நாம பஜனை நிகழ்வு தம்பிலுவில் சாயி நிலையத்தில் தம்பிலுவில் சத்ய சாயி நிலையத்தில் தம்பிலுவில் சாயி நிலைய தலைவர் K.புவனராசா தலைமையில், சத்ய சாயி நிலைய உறுப்பினர்களின் ஏற்பாட்டில் வெகு சிற்பப்பாக இடம்பெற்றது.
இவ் அகண்ட நாம பஜனை நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் பகவானின் பிறந்த நாளுக்கு முன்னால் வரும் சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெறும்
இவ் பஜனை “மூச்சைப்போல் பஜனை இடைவிடாமல் நடக்க வேண்டும். சொல்லப்போனால் மூச்சு இடைவிடாமல் பஜன் செய்கிறது. ஏனெனில் அது அடிப்படையான ‘ஸோஹம்’ எனும் மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருக்கிறது. வாழ்நாளுடன் ஒப்பிடும்போது 24 மணி நேரம் என்பது வெறும் கண்னிமைக்கும் நேரம். இறைவனது மகிமைகளைப் பாடுவதாகும். மந்திரத்தை ஜபித்துக்கொண்டே உரக்கப், கூட்டாகப் பாடி பேராசை, வெறுப்பு, பொறாமையால் மாசடைந்த சுற்றுபுறத்தினை பஜனையின் புனிதமான அதிர்வுகளை ஏற்படுத்தி தூய்மையினை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!