Contact Form

Name

Email *

Message *

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகள்

(ஜெ.லாறுஜன், ASK) திருக்கோவில் பிரதேச சபையின் ஊடாக தம்பிலுவில் பொது நூலகத்தின் எற்பாட்டில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் வாசிப்பு மாத்தினை முன்னிட்டு விழி…

Image


(ஜெ.லாறுஜன், ASK)


திருக்கோவில் பிரதேச சபையின் ஊடாக தம்பிலுவில் பொது நூலகத்தின் எற்பாட்டில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் வாசிப்பு மாத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும்,புத்தகக் கண்காட்சியும் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் 30.10.2018  செவ்வாய்க்கிழமை திருமதி கோமதி நடராஜா தலைமையில் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் போது வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு சுலோகங்களை ஏந்தியவாறு பாடசாலை மாணவர்களின் ஊர்வலமானது தம்பிலுவில் பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமாகி திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று மீண்டும் நூகலத்தினை வந்து அடைந்தனர்.

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதை தொடர்ந்து அதிதிகளால் மாணவ, மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசபை  தவிசாளர் இ.வி.கமலராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தி வீரபத்திரன்,கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.தர்மபாலன், வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.விநாயகமூர்த்தி, கிராம உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம் மற்றும் பிரதேச சபை, பொது நூலக உத்தியோகத்தர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.












You may like these posts

Comments