
[NR]
தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் அணிக்கு 11ஒருவர் கொண்ட 10 ஓவர்கள் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது கடந்த 06.10.2018 சனிக்கிழமை ஆரம்பமாகியது. இப் போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி இன்றையதினம் 29.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது இவ்வருடம்(2018)ல் தரம் ஐந்து புலமைபரிசில்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் எதிரொலி அணிக்கான புதிய விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்படத்தக்கது.
இப் நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டார , பொறியியலாளர் திரு R.யுவேந்திரா, அனுசரனையாளர் தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் இன் உரிமையாளர் திரு ஜீ.எஸ்.காந்தன், மற்றும் புதிய விளையாட்டு சீருடைக்கான அனுசரனையாளர் சி.இதயகாந்தன் அவர்களும் மற்றும் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களின் பெற்றோர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இத்தொடரின் இறுதிப் போட்டி அக்கரைப்பற்று ஜோலி போய்ஸ் அணிக்கும் மற்றும் தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணிக்கும் இடம்பெற்றது.இவ் இறுதிப் போட்டியில் தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!