[ Sathu ]

தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் வருடாந்த உற்சவமானது கடந்த 03.09.2018 அன்று ஆரம்பமானது தினமும் பூஜைகள், ஆராதனைகளும் உள்வீதி மற்றும் வெளிவீதி திருவிழாக்கள் இடம்பெற்று இவ் உற்சவத்தின் இறுதி நாள் விநாயகர் சதுர்த்தி தினமான இன்றைய தினம் 13.09.2018 சுவாமியின் சமுத்திர தீர்த்தோற்சவம் நிகழ்வானது வெகுசிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன் போது விநாயகப்பெருமான் மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டு தம்பிலுவில் தாளையடி சிவன் ஆலயத்தின் சமுத்திர முற்றத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்த அடியார்களின் அரோகரா கோசத்துடன் விநாயகப்பெருமானின் சமுத்திர தீர்த்தோற்சவ நிகழ்வானது இடம்பெற்றது.
இவ் உற்சவகால கிரியைகள் மாறும் தீர்த்தோற்சவ நிகழ்வுகளை தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ.க.லோகனாதக்குருக்கள் ஐயா அவர்களினால் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பகத் அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!