
சத்ய சாயி நிலையயத்தினால் வாரம் தோறும் பாலவிகாஷ் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இவ் பாலவிகாஷ் வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் பாலவிகாஷ் சிறுவர்தின நிகழ்வானது 17.09.2018 திகதி திங்கட்கிழமை இன்றையதினம் தம்பிலுவில் சத்ய சாயி நிலையத்தில் தம்பிலுவில் சாயி நிலைய தலைவர் K.புவனராசா தலைமையில், சத்ய சாயி நிலைய உறுப்பினர்களின் ஏற்பாட்டில் வெகு சிற்பப்பாக இடம்பெற்றது.
இதன் போது சத்ய சாயி நிலையத்தின் பாலவிகாஷ் மாணவர்களினால் பல்வேறுபட்ட கலை நிகழ்சிகளும் மற்றும் சிறப்பு உரைகளும் மற்றும் சிறப்பு வில்லுப்பாட்டு மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட சாயி பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் இக் கலை நிகழ்வுகளை நெறியாள்கை செய்த ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!