Contact Form

Name

Email *

Message *

இன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு

கிழக்கின் முதற் திருப்படைக்கோவில் என போற்றப்படும் தேசத்துக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஆலய புகழ்பாடும் பக்தி இறுவெட்டு புதன்கிழமை (08) பி.பகல் 04.30 மணிக்கு வெ…

Image

கிழக்கின் முதற் திருப்படைக்கோவில் என போற்றப்படும் தேசத்துக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஆலய புகழ்பாடும் பக்தி இறுவெட்டு புதன்கிழமை (08) பி.பகல் 04.30 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வு ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்க குருக்கள் ஆசீவாத பூசையுடன் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இந்தியா தபோவனம் ரிஷிகேசம் இமயமலை சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ , பிரதம அதிதியாக நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்;


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ் வைத்தியகலாநிதி திருமதி.சு.இராஜேந்திரா சுகாதார வைத்திய அதிகாரி- திருக்கோவில், திரு.பி.மோகனகாந்தன் வைத்திய அத்தியட்சகர் ஆதாரவைத்தியசாலை திருக்கோவில். உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜயரூபன் ஆகியோருடன் உயர் அதிகாரிகள், கல்வியாளர் வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் இலக்கிய ஆர்வளர்கள் கல்வியாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ் இறுவட்டானது திருக்கோவில் ஏ.எஸ்.கே.திருவதிகைக் கலைக்கூடத்தின் வெளியீடாக வருவதுடன் இறுவெட்டில் உள்ள அனைத்துப் பாடல்களையும் திருக்கோவில் ஏ.எஸ்.கார்த்திகேசு அவர்கள் எழுதி ஆக்கியுள்ளதுடன் இசை பிரம்மஸ்ரீ.இரா.நீதிராஜசர்மா அவர்கள் இசையமைத்தள்ளதுடன் பாடல்களை கின்னஸ் பாடுநிலா உலகப்புகழ் எஸ்பி.பாலசுப்பிரமணியம், அவர்களும் ஸ்டான்லி (இந்தியா) நிவாசின் சக்திவேல் (இந்திய) நீதிராஜசர்மா நீ. குருபரன்சர்மா (இலங்கை) ஆகியோர் பாடியுள்ளதுடன் வெளியீட்டு விழாவினை திருக்கோவில் முருகன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்றம் ஏற்பாடு செய்துள்ளதுடன் பாடல்கள் பற்றி நயவுரையை கோவிலூர் செல்வராஜன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.










பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெயியீடு Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

You may like these posts

Comments