Contact Form

Name

Email *

Message *

பிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி

எமது தம்பிலுவில் இன்போ வின் ஊடக அனுசரணையில்   தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின்  2000 வருட சாதாரண தர   மாணவர்களின் ஏற்பாட்டில்  பிரமாண்ட மின்னொளியில் இரவுநேர …

Image


எமது தம்பிலுவில் இன்போ வின் ஊடக அனுசரணையில்  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2000 வருட சாதாரண தர  மாணவர்களின் ஏற்பாட்டில் பிரமாண்ட மின்னொளியில் இரவுநேர   அணிக்கு 07 வீரர்கள் கொண்ட  5 ஓவர் மட்டுபடுத்தப்பட்ட மென்பந்து  கிரிக்கெட்  சுற்றுப்போட்டியானது கடந்த  2018.08.03 திகதி வெள்ளிக்கிழமை  தம்பிலுவில் ஆதவன் பொது விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.

இதன் அரைஇறுதி மற்றும் இறுதி போட்டியில் நிகழ்வானது 2018.08.05 திகதி  ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் இரவு 7.00 மணியளவில் ஆரம்பமாகி   இறுதி போட்டி நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றது. இதில் இரண்டு அரைஇறுதி போட்டிகள் இடம்பெற்றது. இதன் முதலாவது போட்டி விநாயகபுரம் மின்னொளி அணியினருக்கும் திருக்கோவில் உதயசூரியன் அணிக்கும் இடையில் நடைபெற்றது இதில் உதயசூரியன் அணியினர் வெற்றி பெற்றனர். 

இரண்டாவது அரைஇறுதி போட்டி கிங்க்ஸ் ஏலேவேன் அணிக்கும் ரஹீமியா அணியினருக்கும் இடையில் நடைபெற்றது இதில் ரஹீமியா அணியினர் வெற்றி பெற்றனர். 

தொடர்ந்து இறுதி போட்டி ரஹீமியா அணிக்கும்  திருக்கோவில் உதயசூரியன்  அணியினருக்கும் இடையில் இடம்பெற்றது. இதில் ரஹீமியா அணியினர் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.

இப் போட்டியின் வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசில்களினை பிரதான அனுசரனையாளர் தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் இன் உரிமையாளர் திரு ஜீ.எஸ்.காந்தன், இணை  அணுசரனையாளர் கே.எம்.ஆர் மோட்டோர்ஸ் உரிமையார் திரு.கிருதரன் மற்றும் தம்பிலுவில் ஆர் என் சீடி ஹோம் உரிமையாளர் திரு.என்.ஏ. லோஜன் ஆகியோருடன்  2000 வருட சாதாரண தர மாணவர்களின் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இப்போட்டியின் போது 1ஆம் இடம் பெறும் அணிக்கு 40,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், 2ஆம் இடம் பெறும் அணிக்கு 20,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது. 


எமது தம்பிலுவில்.இன்போவின்  ஊடக பங்களிப்பில் இப் போட்டி நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

































You may like these posts

Comments