Contact Form

Name

Email *

Message *

கண்ணகி அம்மன் "வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் 2018ன் திருக்குளிர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு  நமது ஊரின் வளர்ந்து வரும் இளம்  கலைஞர்களினால் தமது ஏற்பாட்டில் கண்ணகி…

Image

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் 2018ன் திருக்குளிர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு  நமது ஊரின் வளர்ந்து வரும் இளம்  கலைஞர்களினால் தமது ஏற்பாட்டில் கண்ணகி அம்மனின் பாடல்கள் அடங்கிய  "வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா" பாடல் இறுவெட்டு ஒன்று தயாரிக்கப்படுள்ளது.

 இவ் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வானது நாளை  25.05.2018 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில்  தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில்   நடைபெறவுள்ளது


இவ் இறுவெட்டானது தம்பிலுவில் RN CD Home மற்றும் அம்மன் அச்சகம் தம்பிலுவில் இன் அனுசரணையில் கண்ணகி அம்மன் மற்றும் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் பாடல்கள் அடங்கி இவ் இறுவெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ம.மேகசியாமளன், சு.சபேசன், ஆ.ஆருஜன், பா.பத்மியா , பா.பவ்யா, வ.சிதுசயோமி ஆகியோர் பாடியுள்ளனர். இதற்கு இசை அமைப்பினை க.பிரணவனும், செ.நேருஜனன் ஆகியோரும் இதற்கான பாடல் வரிகளை க.விஜிதரன் மற்றும் ச.சஞ்சிகா ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் இவ் இறுவெட்டு வெளியீட்டுக்கு எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்குகிறது.













You may like these posts