வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி தாண்டியடி காட்டுப் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரா பௌர்ணமி அலங்காரத் திருவிழா நிகழ்வானது கடந்த 23.04.2018 திங்கட்கிழமை ஆரம்பமானது.
வாஸ்த்து சாந்தி மற்றும் விக்கினேஸ்வரர் பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகள் தொடர்ந்து 01 ஆம், 02 ஆம், 03 ஆம் 04 ஆம் நாள் திருவிழாக்கள் இடம்பெற்று 28.04.2018 இன்றைய தினம் 05 ஆம் நாள் திருவிழாவை தாண்டியடி, சங்கமன்கிராமம், சங்கமன்கண்டி, திருப்பதி பொதுமக்கள் சிறப்பாக செய்யவுள்ளனர்
தொடர்ந்து நாளையதினம் காலை மணியளவில் . சித்திரா பௌர்ணமி தீர்த்தோற்சவ பூசையும் திருபோன்னூஞ்சல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!