விஜயதீபன் தீபிகா என்ற சிறுமியே, இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாயும், சிறுமியும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்ததாகவும் இந்நிலையில், சிறுமி தூக்கத்தில் இருந்து எழுந்து, வௌியே வந்தவேளை, முற்றத்தில் இருந்த நில மட்டத்துடன் காணப்பட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை காப்பாற்றி, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், சிறுமி உயிரிழந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!