தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் ஓர் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டி நிகழ்வானது எதிர்வரும் 31.03.2018 திகதி சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தம்பிலுவில் ஆதவன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டி அணிக்கு 11 வீரர்கள் 7 ஓவர் கொண்ட போட்டியாகும் .
இப் போட்டியில் தம்பிலுவில் மத்திய கல்லூரியின் க.பொ.த சாதாரண தர வருடம் 1997, 2000, 2001 மற்றும் 2004 உயர் தரம், 2002 அணிகள் பங்கு பற்றுகின்றன.
மேலும் பழைய மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியான ஒன்றினைவையும், சகோதரத்துவத்தினையும் மற்றும் நட்புறவையும் ஏற்படுத்தும் வகையில் இப் போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுக்கு
எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!