அதற்கமைய ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவர் கொண்ட குழு ஒன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழுவினால், மேற்படி அமைதியற்ற சம்பவத்திற்கான மூல காரணங்கள், சட்ட ஒழுங்கு மீறப்பட்டுள்ளமை, உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளை மதிப்பீடு செய்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் குறித்த நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் செயற்பட்ட விதம் மற்றும் அவர்களது பொறுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!