Contact Form

Name

Email *

Message *

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மத்தும பண்டார பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமா…

Image

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மத்தும பண்டார பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தொடர்பில் அண்மைய காலமாக நீடித்த பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த அமைச்சை தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு ஏற்கனவே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியிடம் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

எனினும் சரத் பொன்சேகாவை குறித்த அமைச்சுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு ரஞ்ஜித் மத்தும பண்டாரவிற்குச் சென்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்ஜித் மத்தும பண்டார, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக பதவிவகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments