நேற்றையதினம் பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவன் வீதியில் பொதியொன்று விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளாா்.
இந்நிலையில் குறித்த பொதியினுள் பணம் இருந்ததை அவதானித்த அந்த மாணவன் அதனை எடுத்து வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளாா்.
மாணவன் கண்டெடுத்த பொதியில், ஒரு இலட்சம் ரூபா பணம், வங்கிப்புத்தகம், மற்றும் அடையாள அட்டை என்பன இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பணப்பையை உரியவர்களிடம் ஒப்படைக்க பொலிஸாா் நடவடிக்கை எடுத்ததோடு, இந்த குறித்த மாணவனை முன்மாதிரியாக எடுத்து அனைவரும் செயற்பட வேண்டும் என தெரிவித்து, மாணவனை பாராட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பணப்பையை உரியவர்களிடம் ஒப்படைக்க பொலிஸாா் நடவடிக்கை எடுத்ததோடு, இந்த குறித்த மாணவனை முன்மாதிரியாக எடுத்து அனைவரும் செயற்பட வேண்டும் என தெரிவித்து, மாணவனை பாராட்டியுள்ளனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!