கடந்த வருடம் 02.01.2017 திகதி அன்று இவ் திகோ/ விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயமானது அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. கடந்த வருட செய்யபாடுகள் யாவும் இப் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அப் பாடசாலை மாணவர்களின் பெற்றோரின் பூரண ஒத்துளைப்புக்களுடம் வெற்றிகரமாக நடைபெற்று. இப் புதிய 2018 ஆம் ஆண்டின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 15.01.2018 இன்று திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.பி.நாதன் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.இவ் வரவேற்பு நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், வித்தியாலய அதிபர், மற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இதன் போது தரம் ஒன்றிக்கு புதிதாக சேர்ந்த மாணவர் ஒருவரினால் முதலுதவிப்பெட்டி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கான பாட புத்தகங்களும் வித்தியாலய அதிபரினால் வழங்கப்பட்டது.























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!