கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது 3500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ,இந்தத் தொகையை 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சில் கடந்த 26.09.2017 அன்று இடம்பெற்ற தேசிய கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும்; நிகழ்வில் கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்பவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா வழங்கப்படுவதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்; அற்ப அரசியல் இலாபத்திற்காக மக்களை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கு சிலர் முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகுமென்றும் கூறினார்.
பௌத்த சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்வதற்கு சிறுபான்மைக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை அரசியலின் ஓர் திருப்புமனையாகுமென்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அங்கு மேலும் தெரிவித்தார்..

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!