
[திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]
திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதமருக்கு நல்லாசி வேண்டி சிதர்தேங்காய் உடைத்து வழிபாடு
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொது மக்கள் சேவை மற்றும் இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் 40வருட பூர்த்தினை முன்னிட்டு அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகரான் அவர்களின் தலைமையில்2017.08.04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்று வரலாற்று பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் தீபங்கள் வரிசையாக ஏற்றி ஆலயத்தினை வலம்வந்து முருகப் பொருமானுக்கு பூஜைகள் செய்து சிதர் தேங்காய் உடைத்து வழிபாடுகள் செய்தையும் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதகுருக்கள் அவர்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதையும் படங்களில் காணலாம்.