Contact Form

Name

Email *

Message *

தேசிய சேமிப்பு வங்கியின் தேசிய ரீதிலான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருந்தரங்கு

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு இடம் பெற்று வருகின்றது. இதன்…

Image
இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு இடம் பெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளையினதும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைமையகமும் இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான கருத்தரங்கு தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யின் பிரதான மண்டபத்தில் கடந்த 29.07.2017 சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திருக்கோவில் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட சுமார் 300 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.


இக் கருத்தரங்கு தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில்கிளையின் முகாமையாளர் A.A.அன்ராடோ தலைமையில் நடைபெற்றது. இக் கருத்தரங்கில்  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யிலும் இக்கல்லூரியின் அதிபர் திரு.வ. ஜயந்தன், தேசிய சேமிப்பு வங்கியின் தலைமையாகத்தின்    சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும்  ஆசிரியர் அன்ரனிவுறுனோ  வளவாளர்களாகவும் கலந்து கொண்டார். இப் பயிற்சிப்பட்டறையில் இன் நிகழ்வில் வங்கி ஊளியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






























You may like these posts

Comments