
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிய அளவிலான உதவிகளை வழங்க முன்வரும் போது அவர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 07.06.2017 புதன்கிழமை சுமார் மூன்று இலட்சம் ரூபா பெருமதியிலான உதவிகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்திற்கு வருகை தரும் போது, பிரதேசத்தின் நிலைமைகளை அவதானிக்க கூடியதாக இருந்தது என தெரிவித்த பிரதியமைச்சர், பிரதேச செயலாளர் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் தன்னுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த ஆண்டிலும் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அபிவிருத்திப் பணிகளுக்கு இயலுமானளவு பங்களிப்புகளை தாம் வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!