
[NR]
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும் நிகழ்வு இலங்கை இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டப்பத்தான் குடியினர் மற்றும் ரோஜித் நகை தொழிலகத்தின் அனுசரணையுடன் 2017.06.08 வியாழக்கிழமை நேற்றைய தினம் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி அரங்கில் பூஜை நிறைவுற நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்பமாக தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெற்றது. இவ் இறுவெட்டனது எமது பிரதேச வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களினால் வெளியிடப்பட்டது. இவ் இறுவெட்டின் முதலாவது பிரதி தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கப்புகனார் திரு.க.தங்கத்துரை அவர்களுக்கு இவ் இறுவெட்டின் பாடல் வரிகளை எழுதிய திரு.க.விஜிதரன் அவர்களினால் வழங்கப்பட்டது. இரண்டாவது பிரதியானது கண்ணகை அம்மன் ஆலய தலைவர் திரு சண்முகம்பிள்ளை அவர்கட்கு பாடல் பாடிய செல்வி. பா.பவ்யா அவர்களினாலும் 3வது பிரதி கண்ணகை அம்மன் ஆலய வண்ணக்கர் திரு மலரவன் அவர்கட்கு இசை அமைப்பினை மேற்கொண்ட திரு.க.பிரணவனும் 4ஆம் பிரதியினை தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய செயலாளர் அவர்கட்கு இவ் இறுவெவெளியீட்டிற்கு அனுசரணை வழங்கிய தம்பிலுவில் RN CD Home உரிமையாளர் என்.ஏ.லோஜன், மற்றும் 5வது பிரதியினை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் அவர்கட்கு பாடல் பாடிய செல்வி. பா.பத்மியா அவர்களும் வழங்கி வைத்தனர். மற்றும் இவ் இறுவெட்டில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உதவிகப்புகனார் திரு.ச.டினசீலன் அவர்களும் பாடல் பாடியுள்ளார். இவ் இறுவெட்டு வெளியீட்டுக்கு எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்கியது.
மேலும் இதன் பொது நடைபெற்ற கண்ணகி விழாவில் எமது பிரதேச மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. கலை நிகழ்ச்சிகளினை நெறியாள்கை செய்த ஆசிரியர்களினை தம்பிலுவில் ரோஜித் நகை தொழிலகத்தினர் கௌரவித்தனர்.

