
திருகோணமலை மூதூர் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அம்பாறையில் ஆர்ப்பாட்டமொன்று 07.06.2017 புதன்கிழமை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட திருக்கோவில் மெதடிஷன் மிசன் தமிழ் மகாவித்தியாலய மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மூதூர் சிறுமிகள் மீதான துஷ்பிரயோக சம்பவத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
“எங்களை காப்பாற்றுங்கள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குங்கள், சிறுவர் மீதான துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள், நீதி வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்றைய தினம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!