தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் அணிக்கு பதினொருவர்(11) கொண்ட, ஆறு(6) அணிகளுக்கான றேஞ்சர்ஸ் பிரிமியர் லீக் சுற்று போட்டியின் [RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2017 (SEASON-VII)] 7வது போட்டி நிகழ்வானது கடந்த 08.04.2017 சனிக்கிழமை அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் ஆரம்பமானது, இவ் ஆரம்ப நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.ஏ.எஸ்.கே.பண்டார, தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் திரு.வ.ஜயந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்,இவ்வாறாக நான்கு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டி நிகழ்வு கடந்த 15.04.2017 சனிக்கிழமை இடம்பெற்றது. இப்போட்டியில் சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் மற்றும் டேயர் டவல்ஸ் அணிக்கும் இடம்பெற்றது, இப்போட்டியில் சூப்பர் கிங்க்ஸ் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்காக வெற்றி கிண்ணங்களை தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் திரு.வ.ஜயந்தன் அவர்கள் வழங்கி வைத்தார் .


















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!