Contact Form

Name

Email *

Message *

மோட்டார் சைக்கிள் விபத்து ! இருவர் பலி

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

Image
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

அக்கரைப்பற்று-பொத்துவில் பிரதான வீதியின் அக்கரைப்பற்று CTB அருகாமையில் கடந்த 2017.04.17 பி.ப 1 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தின்போது ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த 43 வயதுடைய கண்ணன் அப்துல் சலாம் என்பவரும், 24 வயதுடைய அக்கீப் அப்துல் றசீஸ் என்பவருமே விபத்தின்போது உயிரிழந்தவர்களாவர்.

பொத்துவில் பிரதேசத்திலிருந்து தமது வதிவிடமான ஒலுவில் பிரதேசத்தினை நோக்கி அதி வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த வேளையில் பிரதான வீதியின் வளைவில் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் எதிரே இருந்த மதிற் சுவரில் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது மோட்டார் மோட்டார் சைக்கிளினைச் செலுத்தி வந்த கண்ணன் அப்துல் சலாம் என்பவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த அக்கீப் அப்துல் றசீஸ் என்பவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



You may like these posts

Comments