Contact Form

Name

Email *

Message *

பாடசாலைகளில் சுகாதார மேன்பாட்டிற்கான பரிசில் வழங்கும் நிகழ்வு

[Raju] சுகாதார மேம்பாட்டில் சிறந்த பாடசாலை எனும் தொனிப்பொருளின் கீழ்  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நடைபெற்ற போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தில் ஜனாதிபதி விருதினை அண்மை…

Image
[Raju]

சுகாதார மேம்பாட்டில் சிறந்த பாடசாலை எனும் தொனிப்பொருளின் கீழ்  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நடைபெற்ற போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தில் ஜனாதிபதி விருதினை அண்மையில் திகோ/தம்பட்டை  செமன்புலை கணேசா வித்தியாலயமும், திகோ/ கோமாரி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயமும், திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.


மேலும் இப் போட்டியின் போது  திருக்கோவில் கல்வி வலயத்தில் நான்கு ஆறுதல் பரிசில்களை வென்று கொண்டன. இதற்கான ஆறுதல் பரிசில்களை   திருக்கோவில் கல்வி வலயத்தின்  வலயக்கல்வி பணிப்பாளர்  திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது  கடந்த 04.04.2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது   இந்நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கோட்ட கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .














You may like these posts

Comments