Contact Form

Name

Email *

Message *

பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்த நடவடிக்கை

பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்தப்படவுள்ளது.

Image
பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்தப்படவுள்ளது.


இது தொடாபாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தாதவது: இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில் நிர்மாணிக்கப்பட்டுகிறது என்றார்.
இதற்காக 50 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. இந்தப் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. பரீட்சை நடாத்துதல், விடைத்தாள் பரீட்சித்தல், பெறுபேறுகளை வெளியிடல், வினாத்தாள் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளை விரைவாகவும் நம்பத்தகுந்த முறையில் மேற்கொள்வதற்கு இதுதுணை புரியுமென ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார மேலும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்துவதற்காக பாடசாலைகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. பரீட்சைகளுக்காக இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பரீட்சை சான்றிதழை வழங்கும் வேலைத்திட்டம் செயற்றினாக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

You may like these posts

Comments