Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் தனியார் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ] திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலவில் 01 குறிச்சி பிரதான வீதியில்  இயங்கி வந்த கோபாலபிள்ளை ஸ்டோரஸ் (ஆதவன் விளையாட்டு மைதானத்…

Image
[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ]

திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலவில் 01 குறிச்சி பிரதான வீதியில்  இயங்கி வந்த கோபாலபிள்ளை ஸ்டோரஸ் (ஆதவன் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில்) இன்று 24.03.2017 வெள்ளிக்கிழமை  நல்லிரவு 2.30 மணியளவில் தீ பிடித்து எரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.

மேற்படி வர்த்தக நிலையத்தில் இருந்த குளீர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பரவி இவ் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் முலம் தெரியவருகின்றது.

இவ் வர்த்தக நிலையம் எரிந்ததன் மூலம் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உரிமையாளர் சின்னத்தம்பி கோபாலபிள்ளை கவலை தெரிவித்துள்ளதுடன் இவ் தீ விபத்து தொடர்பாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









You may like these posts

Comments