Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் தேசிய பாடசாலையில் நடைபெற்ற திருவள்ளுவர் குருபூஜை நிகழ்வு

[NR] ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் 'உலகத் தமிழ் மறையாம்', பழந்தமிழ் இலக்கியமான "திரு…

Image
[NR]

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் 'உலகத் தமிழ் மறையாம்', பழந்தமிழ் இலக்கியமான "திருக்குறள்" என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் 'தெய்வப்புலவர்' திருவள்ளுவர் பெருந்தகை ஆவர் . உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவராவர்.


அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கின்ற திருவள்ளுவர் பெருந்தகையின் குருபூஜை தின நிகழ்வு தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் கடந்த 13.03.2017 திங்கட்கிழமை கல்லூரி அதிபர் திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய பாடசாலையின் முற்றத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு விசேட  பூஜைகள் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.







You may like these posts

Comments