Contact Form

Name

Email *

Message *

ஆசிரியர் நியமனங்களில் பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை!

விளையாட்டுத்துறை ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள…

Image
விளையாட்டுத்துறை ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


மாரவில புனித சேவியர் மத்திய மாஹா வித்தியாலயத்தின் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், இந்த ஆண்டு முதல் நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் விளையாட்டுத்துறை துணை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பாடசாலைகளை விட்டு வெளியேறிய திறமையான மாணவ மாணவியர் இந்த பதவி வெற்றிடங்களுக்காக நியமிக்கப்படுவர். மாணவர் படையணியில் உயர் பதவிகளை வகித்த மாணவ மாணவியருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

விளையாட்டுத்துறை ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் பணிகளை கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து செயற்படுத்த உள்ளன என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may like these posts

Comments