திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சங்கமன் கண்டிப்பிள்ளையார் ஆலய பரிவார மூர்த்திகளான நவக்கிரக ஆலய மகா கும்பாபிடேகம் எனும் திருக்குட முழுக்குப் பெருவிழா விஞ்ஞாபனமானது 16.01.2017 திங்கள்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி, நேற்றையதினம் 17.01.2017 செவ்வாக்கிழமை எண்ணைக்காப்பு சாத்துதல் நிகழ்வு இடம்பெற்று இன்று 18.01.2016 புதன்கிழமை காலை கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை தொடக்கம் மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நவக்கிரக மகா கும்பாபிஷேகம் இடம் பெற்றது.
இக் கும்பாபிஷேக கிரியைகள் அனைத்தும் பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ லோகநாதக் குருக்கள் தலைமையிலான குருமார்களால் நடத்தப்பட்டது. இவ் கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.







Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!