அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான பாதையில் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தின் அருகாமையில் 18.12.2016 இன்று ஞாயிறு காலை சுமார் 11.00 மணி அளவில் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.இவ் விபத்தில் அக்கரைப்பற்று பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த கனரகவாகனமும் முற்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் எவருக்கும் எதுவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை, இது தொடர்பான மேலதிக விசாரணையினை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .












Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!