Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் 40 பேர் உணவு ஒவ்வாமையால் சிகிச்சை

இரத்தினபுரியிலிருந்து பொத்துவில், அறுகம்பைப் பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்ற சுமார் 40 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தி…

Image
இரத்தினபுரியிலிருந்து பொத்துவில், அறுகம்பைப் பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்ற சுமார் 40 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் 26.12.2016 இன்று திங்கட்கிழமை அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றதாக வைத்திய அதிகாரி டாக்கடர்.எம்.மோகனகாந்தன் தெரிவித்தார்.


அறுகம்பையிலிருந்து திருக்கோவில் பிரதேசம் ஊடாக வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு திடீரென்று வயிற்று வலி, வயிற்றோட்டம், தலைச்சுற்று என்பன ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

அறுகம்பைப் பிரதேசத்திலுள்ள உணவகங்களில் காலை உணவை உட்கொண்டதாகவும் இதன் பின்னர் குடிநீர் அருந்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். உணவில் ஏற்றப்பட்ட மாற்றத்தின் காரணமாக இவ் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

You may like these posts

Comments