Contact Form

Name

Email *

Message *

மட்டக்களப்பில் நூலக, தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கைநெறி- தொழில்சார் நூலகராவதற்கான ஓர் நுழைவாயில்

இலங்கை நூலகச் சங்கத்தினால் நாடுபூராவும் நடாத்தப்பட்டுவரும், நூலக, தகவல் விஞ்ஞான டிப்ளோமா  (DIPLIS)  கற்கைநெறியின் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு…

Image
இலங்கை நூலகச் சங்கத்தினால் நாடுபூராவும் நடாத்தப்பட்டுவரும், நூலக, தகவல் விஞ்ஞான டிப்ளோமா (DIPLIS) கற்கைநெறியின் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நூலக, தகவல் விஞ்ஞான ஒருங்கிணைப்பாளரும், விரிவுரையாளருமான தீசன் ஜெயராஜ் தெரிவித்தார்.

மூன்று வருட நிலைகளைக் கொண்டு, வார இறுதி நாட்களில் கொழும்பு, பதுளை, காலி, கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடாத்தப்பட்டுவரும் இக்கற்கைநெறியானது, மட்டக்களப்பில் தமிழ்மொழி மூலம் நடாத்தப்பட்டு வருகின்றது. ஓவ்வொரு வருட இறுதிப்பரீட்சைப் பெறுபேற்றினடிப்படையிலும் மாணவர்கள் அடுத்த வருட நிலைக்கு தகுதிபெறுவார்கள்.

2017ஆம் ஆண்டுக்கெனக் கோரப்பட்டுள்ள 1ஆம் வருடக் கற்கைநெறியில் இணைய விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்ற பட்டம் அல்லது க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்திகள் இருப்பதோடு, க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் தாய்மொழியில் திறமைச்சித்தியுடன்;, ஆறு பாடங்களில் (கணிதம் மற்றும் ஆங்கிலம் உட்பட) சித்தியும் பெற்றிருத்தல் அவசியமாகும்.
மூன்று வருடக் கற்கை நெறியின் பின் இலங்கை நூலகச் சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெறுவதோடு, கொழும்புப் பல்கலைக்கழக தேசிய நூலக, தகவல் விஞ்ஞான நிறுவகத்தில் (NILIS) உயர்கல்வி பெறும் தகைமையையும் பெற வாய்ப்பிருக்கிறது.இலங்கை நூலகச் சங்கத்தின் மட்டக்களப்பு நிலையமான, வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் ஒன்றுவிட்டொரு வார இறுதிநாட்களில் நேரடி விரிவுரை நிலையில் நடாத்தப்படப் போகும் முதலாம் வருட கற்கைநெறிக்கான கட்டணம் ரூபா 16,000/= ஆகும். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலும்கூட தமிழில் தொடர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.slla.org.lkஎனும் இணைய முகவரியில் விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்து, நிரப்பி 'இலங்கை நூலகச் சங்கம்' எனும் பெயருக்கு எழுதப்பட்டதும், 'டொறிங்டன் உப தபால் அலுவலகத்தில்' மாற்றக்கூடியதுமான ரூபா 200/= பெறுமதியான காசுக்கட்டளையுடன் " Officer, Sri Lanka Library Association, OPA Centre, No. 275/75, Prof. Stanley Wijesundera Mawatha, Colombo –07” எனும் முகவரிக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கலாம். 
விண்ணப்பதாரிகள் மூலச் சான்றிதழ்களின் உறுதித்தன்மையை நிரூபிக்க, நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்படிவத்தை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்ய வாய்ப்பில்லாதவர்கள், விண்ணப்பப்படிவத்தைக் கோரும் தமது கடிதத்துடன் ரூபா 200/= பெறுமதியான காசுக்கட்டளையையும் ரூபா 15/=முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியிட்ட கடித உறையுடனும் மேற்படி விலாசத்திற்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களைப் பெறவிரும்புவோர் ஒருங்கிணைப்பாளரும், விரிவுரையாளருமான தீசன் ஜெயராஜூடன் 071-3412206 எனும் இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளமுடியும்.

You may like these posts

Comments