Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து திருக்கோவில் கல்விவலயத்திற்கு உட்பட்ட ஆறு பாடசாலைகளுக்கு கற்றல…

Image
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து திருக்கோவில் கல்விவலயத்திற்கு உட்பட்ட ஆறு பாடசாலைகளுக்கு கற்றல் சார் உபகரணங்களை வழங்கும் நிகழ்வானது கடந்த 14.10.2016 திகதி வெள்ளி அன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.




இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வகவீந்திரன் கோடீஸ்வன் அவர்களும், திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜன் மற்றும் பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்படி,

  1. திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்,
  2. திகோ/விநாயகபுரம் சக்தி வித்தியாலயம், 
  3. திகோ/ தம்பிலுவில் தேசிய பாடசாலை, 
  4. திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம்,
  5. திகோ/மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு நிழற்பிரதி இயந்திரமும், 


மற்றும் திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் முகவாயில் அமைப்பதற்காக அப் பாடசாலைக்கு ருபா. ஏழு இலட்சம் (700,000/=) உம் மற்றும் திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயத்திற்கு மாணவர்களுக்கான மேலைத்தேய இசைக்கருவிகளும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கிவைத்தார்.












You may like these posts

Comments