அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட காஞ்சிரம்குடா சந்தியில் இன்று 22.06.2017 வியாழக்கிழமை அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் காஞ்சிரம்குடா பாலத்திற்குள் பாய்ந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்தக் கொண்டு இருந்து கார் வேககட்டுப்பாட்டை இழந்து பாய்ந்துள்ளது. இதனையடுத்து பொலிஸ்,இரானுவம் மற்றும் பொது மக்களின் உதவியுடன் காரில் பயணித்தவர்களையும் காரையும் பாலத்துக்குள் இருந்து மீட்டுள்ளனர்.
காரில் பயணித்த முன்று நபர்களும் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!