Contact Form

Name

Email *

Message *

'யங்பிளவர்" விளையாட்டுக்கழகத்தின் ஆர்.பி எல் 2016” வெற்றிக்கிண்ணம் -தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் கழகம் சம்பியன்

அம்பாரை அக்கரைப்பற்று 'யங்பிளவர்' விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நேற்று(02) நடைபெற்ற 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆர்.பி (ச…

Image
அம்பாரை அக்கரைப்பற்று 'யங்பிளவர்' விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நேற்று(02) நடைபெற்ற 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆர்.பி (சுP) 2016 ஞாபகார்த்த' வெற்றிக்கிண்ணத்திற்கான மென் பந்து கிரிக்கெட் போட்டியில் தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் கழகம் சம்பியனாக தெரிவானது.

மறைந்த கழகத்தின் வீரர்களான கிராம உத்தியோகத்தர் பரதேசி பத்மநாதன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் முத்தையா சாந்தசிறி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் தம்பட்டை இலவன்ஸ்டார் அணியினை எதிர்கொண்ட ரேஞ்சர்ஸ்  அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவானது.
மொத்தமாக 32அணிகள் கலந்து கொண்ட விலகல் முறையிலான 6நாட்கள் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்காக இவ்விரு அணிகளும் தெரிவாகின. இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியி;ல் வெற்றி பெற்ற ரேஞ்சர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் வீரர் எஸ்.மதியின் அபாரத்துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட 38 ஓட்டங்களுடன் 10ஓவர்கள் நிறைவினில் 7விக்கெட்டினை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலவன்ஸ்டார் அணி 10ஓவர்களின் நிறைவினில் 7 விக்கெட்டுக்களையும் இழந்து 77ஓட்டங்களை மாத்திரம் பெற்று ரண்ணர்அப்பாக தெரிவு செய்யப்பட்டது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக் 38ஓட்டங்களை பெற்ற ரேஞ்சர்ஸ் அணி   வீரர் எஸ்.மதி தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகன் விருதை இலவன்ஸ்டார்  அணியை சேர்ந்த எஸ்.தயாளன் தட்டிச் சென்றார்.

இறுதிப் சுற்றுப்போட்டியின் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உள்ளிட்ட கழக வீரர்கள் கழக உறுப்பினாகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணிக்கான சம்பியன் கிண்ணத்தினையும் ரூபா 15000ஆயிரம் பெறுமதியான காசோலையும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வழங்கி வைத்ததுடன் இரண்டாவது இடத்தினை பெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் ரூபா 10000ஆயிரம் பெறுமதியான காசோலையும் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் வழங்கியதுடன் ஏனைய விருதுகளையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.




You may like these posts

Comments