2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை, திருக்கோவில் கல்வி வலயத்தில் 110 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.மேலும், இவ்வலயத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூலமான 02 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளனர்.
திருக்கோவில் கோட்டத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருபாகரன் புவிராஜனும் ஆலையடிவேம்புக் கோட்டத்திலுள்ள திருவள்ளுவர் பாடசாலையைச் சேர்ந்த கனகராஜ் விதுர்காவுமே 184 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.இவ்வலயத்தில் 3 மாணவர்கள் 182 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.பொத்துவில் கோட்டத்தில் 14 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 40 மாணவர்களும் ஆலையடிவேம்புக் கோட்டத்தில்; 56 மாணவர்களும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!