தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் 33 மருத்துவ பரிசோதனைகளுக்குகான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானம் தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டுப்பாட்டுச் சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நோயாளர் ஒருவரை குறைந்தது 10 நிமிடங்களாவது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!