Contact Form

Name

Email *

Message *

தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன்  ஒப்பிடுகையில், இலங்கைய…

Image
இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

.இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன்  ஒப்பிடுகையில், இலங்கையில் சுகாதாரத் துறையில் காணப்பட்டுள்ள மற்றுமொரு வெற்றியாகுமென்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 
கர்ப்பிணி காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது சிகிச்சை தொடர்பில் பெண்ணொருவர் உயிரிழப்பது தாய்-சேய் மரணமாகக் கருதப்படுகின்றது. 
நாட்டின் தாய்-சேய் மரணம் தொடர்பான ஆய்வு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. 
இவர்களுள் பெரும்பாலானோர் குறைந்த வருமானத்தினைப் பெறும் குடும்பப்பின்னணியை கொண்டவர்கள். 
இயற்கையான நோய், இருதய நோய் உள்ளிட்ட பல காரணங்களால் தாய்-சேய் மரணங்கள் இடம்பெறுகின்றன. வைத்திய ஆலோசனைகளை உரிய  முறையில் கடைப்பிடிக்காமையே இதற்கு காரணமாக விளங்குகின்றது.

You may like these posts